ஞாயிறு, 3 நவம்பர், 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா விமர்சனம்


சில படங்கள் நன்றாக இருக்கும். சில படங்கள் சுமாராக இருக்கும். சில படங்கள் மொக்கையாக இருக்கும். ஆனால் வெகு சில படங்களே கண்றாவியாக இருக்கும். ஆல் இன் ஆல் அழகு ராஜா இதில் கடைசி வகை. [தமிழக அரசின் வரி விலக்குக்காக இனி அழகு ராஜா என்று மட்டும் படிக்கவும்]. என் 25 வருஷ சர்வீஸில் இதுவரை எந்த படங்களுக்கும் விமர்சனம் எழுதியது இல்லை. தியேட்டரை விட்டு உயிர் பிழைத்தால் போதும் என 45 நிமிடங்களுக்கு முன்னால் ஓடி வந்தது இல்லை. இதையெல்லாம் மாற்றியது இந்த அழகு ராஜா படம்.

நான் எதோ மொக்கை படங்களே பார்க்காதவன் என்று எண்ணி விட வேண்டாம். பில்லா 2 வும் வேலாயுதமும் இது போன்ற இன்னும் சில தரமான (!) படங்களையும் எண்ட் கார்ட் போடும் வரை தியேட்டரில் பார்த்து விட்டு காறி துப்பி வந்திருக்கிறேன். ஆனால் எந்த படத்திலேயும் பாதியில் வந்தது இல்லை.

வக்கீல் வண்டு முருகன் பாஷையில் இந்த படத்தைப் பற்றி சொல்வதென்றால் "இது போன்ற கண்றாவியான படத்தை எங்காவது பார்த்ததுண்டா யுவர் ஆனர். அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியது போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் படம்" .

ப்ளீஸ் ராஜேஷ் சார். ஒரு படம் எடுத்தீங்க சிரிச்சோம். 2 ஆவது படமும் எடுத்தீங்க சிரிச்சோம்.இப்படி எல்லா படத்திலயும் ஒரே கதையையும் சட்டை, ஜட்டி கலர் மட்டும் மாத்தின சந்தானத்தை வச்சு இன்னும் எத்தனை படம் எடுப்பீங்க ? எப்பவாச்சுனா பரவா இல்லை. எப்பவுமேனா ??? ஆடியன்ஸ் பாவம்ல. 3 மணி நேரம் விளம்பர இடைவேளை இல்லாம தியேட்டர்ல ஆதித்யா டிவி போட்டுக்காட்டறது  நீங்க தான். இதுக்கு முன்னாடி வந்த படம் எல்லாம் கதை இல்லேனாலும் சந்தானத்தை வச்சு வண்டி ஓடுச்சு. இந்த படத்துல சந்தானம் வர்ற சீன்ல தியேட்டர்ல மயான அமைதி. ஏன்டா வந்தார்னு. இந்த கோவம் வர்ற மாதிரி காமெடினு வடிவேலு சார் சொல்வாரே அந்த டைப் காமெடி எல்லாமே. அதுவும் ஃபிளாஷ்பேக்னு 1980ல நடக்குற மாதிரி வர்ற ஸீன்ல, சந்தானம் வர்ற ஒவ்வொரு ஸீனுக்கும் கொலைவெறில ஆடியன்ஸ் சைட்ல இருந்து வருது பாருங்க கெட்ட வார்த்தை !@#$ அட அட அட, சும்மாவா சொன்னார் பாரதியார் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

படு மொக்கையான கதைக்களன். கேனைத்தனமான காதல். அதே அம்மா கேரக்டரில் சரண்யா. தமிழ் சினிமாவில் 80 -90 களில் அழுவதற்கென்றே ஒரு அம்மா கேரக்டர் இருக்கும். விசு படங்களில் கூட நடித்திருப்பார். அவர் பெயர் மறந்து போயிற்று. பெரும்பாலும் ரேப் செய்யப்பட்ட ஹீரோயினின் அம்மாவாகவோ, அல்லது வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட நாயகியின் அம்மா கேரக்டரோ தான் அவருக்கு. அது போலத் தான் இப்போது தமிழ் சினிமாவின் தறுதலை பிள்ளைகளின் அம்மா இந்த சரண்யா. நீங்க நல்ல ஆக்டர் தான் சரண்யா மேடம், விருதுலாம் வாங்கி இருக்கீங்க. ஆனா இந்த படத்துல எங்களாலயே முடியல :(

அப்புற‌ம் வழக்கம் போல லூசு மாதிரியான ஹீரோயினாக காஜல் அகர்வால். இதற்கு முந்தைய 1675 படங்களிம் எப்படி சிரித்தாரோ, எப்படி கண்ணை சுருக்கி கோபப்பட்டாரோ அதே ரியாக்ஷன். அப்பப்பபா. டைரக்டர் சார் பொண்ணுங்கலாம் இப்பொ ரொம்ப விவரம். லைலா மாதிரியான லூசு ஹீரோயின் கேரக்டர் எல்லாம் லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சு போயாச்சு. நீங்க இன்னும் விடல. ஆல் இன் ஆல் அழகு ராஜானு டைட்டில் வச்சதுக்கு பதிலா ஆல் இன் ஆல் நேவல் ராஜானு பேர் வச்சிருக்கலாம். ஹீரோயின் முகத்தை விட தொப்புள் தான் ஸ்கிரீன்ல அடிக்கடி தெரியுது.

இப்போ நம்ம செல்லாக்குட்டி சந்தானத்துக்கு வருவோம். பாஸ் என்கிற பாஸ்கரன் பொன்ற 546 படங்கள்ல பண்ண அதே கேரக்டர். இந்த படத்துக்குனு ஒரு மாடுலேஷன் வாய்ஸ்ல. பக்கத்து ஸீட்ல இருந்தவருக்கு ரத்த கொதிப்பே வந்துடுச்சு அதை கேட்டு. இவர் வர்ற சீன்லலாம், பெரிய வில்லனை பார்த்தா தலை குனிஞ்சு நிக்கிற ஊர் மக்கள் மாதிரி எல்லாரும் வாயடைச்சு போயிடறங்க. சந்தானம் எப்போ தறுதலை ஹீரோவுக்கு ஃபிரெண்டா வர்றத நிறுத்துராறோ அன்னைக்கு தான்டா இந்தியா வல்லரசு ஆகும், எழுதி வச்சிக்கோங்க பொது மக்களே.

சசிகுமார் ஸ்டைல்ல சொல்லனும்னா, "தீபாவளி அன்னைக்கு டிவியை விட்டுட்டு தியேட்டர்ல படம் பார்க்க வர்றதே நீங்கலாம் இருக்கீங்க, நல்ல படம் கொடுப்பீங்க அப்படிங்கற நம்பிக்கைல தானடா, பழகுன நீங்களே இப்படி பண்ணா நாங்க எப்படி நம்புறது இனிமே ?" ஒழுங்கா மூடிட்டு துரை சிங்கம் தம்பி சன் டிவில சொல்ற பஞ்ச் டயலாக்குக்கு விசில் அடிச்சிட்டு உட்கார்ந்திருக்கலாம். விதி யாரை விட்டது.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இந்த படத்தை ஃபிரண்ட்ஸோட இல்லாம தனியா தியேட்டர்ல முழு படத்தையும் பாக்கறவங்களுக்கு நான் ஒரு சிக்கன் பிரியாணி ஸ்பான்சர் பண்றேன். சவாலுக்கு தயாரா ? இன்னும் இந்த படத்தில் நடித்த கார்த்தி, ராஜேஷ் போன்ற பலரை திட்டிக்கொண்டே போகலாம். ஆன்லைனில் இதுக்காகலாம் சில KB களை வேஸ்ட் பண்ணனுமா என்ன.

என்னடா திரை விமர்சனம்னு சொல்லிட்டு கதை பத்தி ஒரு வரி கூட சொல்லாம போறானேனு பாக்கறீங்களா ? படத்துல தான் கதை இருக்கும். குப்பைல இருக்குமா என்ன.

பின்குறிப்பு : படத்தின் கடைசி 45 நிமிடங்களை நான் பார்க்கவில்லை. அதுக்கே இவ்வளோ பெரிய விமர்சனம். முழுசா பார்த்திருந்தேன்............. !@#$%^&*()

8 கருத்துகள்:

  1. தமிழ் சினிமாவில் 80 -90 களில் அழுவதற்கென்றே ஒரு அம்மா கேரக்டர் இருக்கும். விசு படங்களில் கூட நடித்திருப்பார். அவர் பெயர் மறந்து போயிற்று. பெரும்பாலும் ரேப் செய்யப்பட்ட ஹீரோயினின் அம்மாவாகவோ, அல்லது வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்ட நாயகியின் அம்மா கேரக்டரோ தான் அவருக்கு. /// கமலா காமேஷ சொல்லுறீங்களா ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவிங்களேதான். காலம் கடந்தும் நிக்குது அந்த அம்மா ! :)

      நீக்கு
  2. //தமிழ் சினிமாவில் 80 -90 களில் அழுவதற்கென்றே ஒரு அம்மா கேரக்டர் இருக்கும். விசு படங்களில் கூட நடித்திருப்பார். அவர் பெயர் மறந்து போயிற்று//

    மறக்கலாமா? அது த்ரிஷா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! இப்படி ஒரு கம்பேரிசனா !!! கமலா காமேஷ் -த்ரிஷா CLOSE ENOUGH !

      நீக்கு
  3. setting-இல் Word Verification - No என்று மாற்றவும்... நிறைய பேர் பின்னூட்டம் இட முடியாமல் திணறுகிறார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தல டிப்ஸ்க்கு :) இத்தனை தடையயும் மீறி நீங்க பின்னூட்டம் போட்டிருக்கீங்க ! சூப்பர்பா, நெக்ஸ்ட் மந்த் 5000 இன்கிரிமென்ட்பா :)

      நீக்கு