பெங்களூருவிற்கு வந்து 6 மாதம் ஆயிற்று, அதற்குள் வாழ்க்கையே தீர்ந்துவிட்டதோ என எண்ணத் தோன்றியது எனக்கு. தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை. பின்பு சாப்பாடு, தூக்கம். சனி ஞாயிறுகளிலும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நீண்ட தூக்கம், 1 வேளை மூக்கு பிடிக்க சாப்பாடு, பின்பு தூக்கம், இப்படியே பொழுது கழியும். கல்லூரி வளாகத் தேர்வில், பெங்களூர் நிறுவனத்திற்கு தேர்வான போது நண்பர்கள் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது, "மச்சி, பெங்களூர்ல வேலைடா உனக்கு, கொடுத்து வெச்சவன்டா நீ, அது பெங்களூர் இல்லைடா, பெண்களூர். இந்தியால எல்லா ஸ்டேட்ல இருக்கிற அழகான பொண்ணுங்க எல்லாம் அங்க தான்டா இருப்பாங்க, அங்கயாவது போய் எதாவது ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிடுடா".அங்கயாவது என்று அவர்கள் சொன்னதுக்கு அர்த்தம் இருக்கிறது, கல்லூரியில் கடலை போடாத கண்ணியவான்களுள் நானும் ஒருவன். நானாக எதையும் வேண்டாம் என்று சொல்லவில்லை, எனக்கு அப்படித்தான் அமைந்தது. நண்பர்கள் பெங்களூரைப் பற்றி சொன்னது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் பெங்களூர் வந்து பார்த்த பின்பு ஏமாற்றமே மிஞ்சியது. ஆம், நான் எதிர்பார்ப்பதோ, சிவாஜி படத்தில் ரஜினி தேடுவதைப் போன்ற ஒரு மங்களாவை, ஆனால் பெங்களூரில் சல்லடை போட்டுத் தேடினாலும் அந்த மாதிரி ஒரு பெண் கிடைக்காது. சரி நமக்கெல்லாம் வீட்டில் பார்த்து வைத்தா தான் கல்யாணம், இந்த லவ்வெல்லாம் ஒத்து வராது என சமாதானப் படுத்திக்கொண்டேன். நாட்டில் இருக்கும் பெரும்பாலான பேச்சிலர்கள் இப்படித்தான். கிடைத்தால் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கென்று யாரும் கிடைப்பதில்லை, அது தான் உண்மை.
பெங்களூரில் மறக்க முடியாத சம்பவங்கள் பல நடந்தது எனக்கு, என் நண்பர்கள் வட்டத்தில் ஓரளவுக்கு ஹிந்தி பேசத் தெரிந்தது நான் மட்டும் தான், ஒருமுறை நண்பர்களோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ப்ளாட்பாரக் கடையில் ஏதோ வாங்க வேண்டி இருந்தது, என்ன பொருள் என்று சரியாக ஞாபகம் இல்லை. நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன், "மச்சி உனக்கு தான் ஹிந்தி நல்லா பேசத் தெரியுமே, அதை பேரம் பேசி வாங்கிக்கொடுடா" என்றான்.மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள். எனக்குப் பெருமை தாங்கவில்லை. கண்களில் பெருமை பொங்க கடைக்காரரிடம், "ஏ கித்னா ஹை?" என்றேன். அவர், "தம்பி அது இருபது ரூவாப்பா" என்றார், சுற்றி இருந்த நண்பர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.கடைக்காரருக்கோ ஒன்றும் புரியவில்லை. எனக்கு பெருத்த அவமானம் ஆயிற்று. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. உலகில் உள்ள எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் தங்களையே கேட்டுக்கொள்ளும் கேள்வி, "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?". யாரும் இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவில்லை இதுவரை. வாழ்க்கை வெறுமையானால் தத்துவங்கள் நிரம்பி வழியும். எனக்கும் அப்படித்தான். வாழ்க்கை வெறுமை ஆகிவிட்டது. ஆங்கிலப்படங்களில் ஸோம்பி என்று சொல்வார்களே அதைப் போன்று, பணம் பணம் என்று எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க, நானும் அந்த கூட்டத்தில் சேர்ந்து விட்டதாகத் தோன்றியது.
அப்பொழுது தான் அந்த சம்பவம் நடந்தது, ஜூலை 12, 2011 என் வாழ்வில் மறக்க முடியாத நாள். என் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட நாள். அன்று அவ்வளவாக வேலை இல்லை, இரவு 8 மணி இருக்கும். வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். வீட்டின் அருகே ஓடும் சாக்கடைக்குப் பக்கத்தில் ஒரு குப்பை மேடு இருக்கும். எதேச்சையாக அதன் மீது என் பார்வை போனது. எதோ ஒரு பொருள் பள பள என்று மின்னியது. எதோ ஒரு குப்பை என்று எண்ணி வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு படுத்தேன். தூக்கம் வரவில்லை. ம்ணி 9.50 காட்டியது. ஏனோ என் மனது குப்பைமேட்டில் இருக்கும் பள பள பொருளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. சரி என்னவென்று பார்க்கலாம் என்று எழுந்து கைலியை சரி செய்துகொண்டு, அந்த குப்பை மேட்டை நெருங்கினேன். நல்ல வேளை இன்று தெருவில் நாய்கள் தொந்தரவில்லை. இல்லை என்றால் அவை எப்பொழுதும் இந்த குப்பை மேட்டை சுற்றிக்கொண்டே தான் இருக்கும். அந்த பொருள் இன்னும் மின்னியது. யார் கண்ணுக்கும் படாத பொருள் ஏன் என் கண்ணில் பட்டது என எண்ணிக் கொண்டே அதன் அருகில் சென்றேன். அது பொருள் இல்லை, அது ஒரு புத்தகம்.குப்பைமேட்டில் இருந்தாலும் புத்தம் புதிதாக இருந்தது. கையில் எடுத்தவுடன் இன்னும் மின்னியது. குப்பைமேட்டில் கையில் இப்படி ஒரு புத்தகத்தோடு இருந்தால் யாரேனும் சந்தேகப்படக் கூடும் என எண்ணி விரைவாக வீட்டிற்கு வந்தேன். நெஞ்சு படபடத்தது. புத்தகத்தின் முகப்பில் பெரியதாக விதி என்று எழுதி இருந்தது.
புத்தகத்தைத் திறந்த உடனேயே அதன் வெளிச்சம், பள்ளத்தைக் கண்ட வெள்ளத்தைப் போல அறை முழுவது நிரப்பியது. நல்லவேளை ரூம்மேட் ஊருக்குப் போய்விட்டான். இல்லாவிட்டால், ஏன்டா லைட்டைப் போட்ட என்று இந்நேரம் புலம்ப ஆரம்பித்திருப்பான். உலகில் எல்லாருக்குமே இதைப்போல இரவில் லைட்டைப்போட்டால் தூக்கத்தில் புலம்பும் ரூம்மேட் இருப்பார்களோ என்று பல நாள் எண்ணியதுண்டு. ஆனால் இன்று என் கவனம் முழுதும் அந்த புத்தகத்தின் மீதே இருந்தது. மூச்சை இழுத்துக்கொண்டு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். யாருமே படிக்காமல், ஆனாலும் வலுக்கட்டயாமாக எல்லா புத்தகத்திலும் இருக்கும் முன்னுரை, அணிந்துரை என்று எந்தப் பகுதிகளும் இந்தப் புத்தகத்தில் இல்லை. முதல் பக்கதிலேயே
"மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை கணிக்கும் புத்தகம்"
என்று எழுதி இருந்தது. அதனடியில் என் பெயர் எழுதி இருந்தது. ஆம், என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை. அது என் பெயரே தான். ஒரு வித நடுக்கத்துடன் புத்தகத்தைத் திருப்ப ஆரம்பித்தேன்.......
- தொடரும்
சீக்கிரம் உங்களுக்கான பக்கத்தை படிச்சிட்டு,எனக்கான பக்கத்தையும் படிச்சு சொல்லுங்க..!! விதி என் வாழ்க்கைல ரொம்பவே விளையாடுது.. ;) :P
பதிலளிநீக்குasusual sema na..!! Keep wrting..am waiting :)
Machi next update eppo.... next yearaa...
பதிலளிநீக்குPlease do it quick... romba nalla irukkudaa...
@priya dharshini நன்றி, உன் விதிப் புத்தகம் எனக்குக் கிடைத்தால் நிச்சயம் சொல்கிறேன் ;)
பதிலளிநீக்கு@nanadha நன்றி மச்சி, சீக்கிரமே அடுத்த பகுதி வெளிவரும்
good start .. interesting plot. continue writing
பதிலளிநீக்குDae next episode la rendu paeru atha bookae thaedi varuvaangalae; athula oru thaan yemen innoruthan sithiragupthan; athu onnum illa machi "Lucky Man" padatha arathukathula sunday night parthurupa ;)
பதிலளிநீக்குChristmas ku Dhoosi thatti ottrai adikardhulaam irukattum.. Vaaraa vaaram perukki suthammaa vechikko daa..
பதிலளிநீக்குKadhaila la vara narration First half la pinniyirukka.. Second half la vara andha PaLLam-VeLLam nalla comparison..
Come on machi..
@GS sure na, will continue writing. Keep reading.
பதிலளிநீக்கு@shrihari I too felt the same when i wrote the story, Its similar to lucky man when you read the vithi book part. But dont worry yaman and chitraguptan will not come to world. You have an interesting story ahead.
@anand sure machi, there will not be any spider webs again in my blog.
@all thanks for your words, keep reading. Its your suggestions and comments that keeps me writing
dai..unaku firstu kayili katta theriuma? Wf
பதிலளிநீக்குvery nice... but nee kadalai pottathu illanu sonna oor nambathu...
பதிலளிநீக்குok ok.. Indha kadhayai paditha anaithu nalla ullangalukkum, siva saarbaaga naan nandri therivithu kolgiren. :-)...
பதிலளிநீக்குArumai nanbaa... un kadhai engae poi mudiyum endru ennaal oogikka mudiyavillai... yaarum unnai kallaal adikkaadhapadi irundhaal sari dhaan. ;)
kalakurada thambi idhu yaaru teriyuda un madini
பதிலளிநீக்குsuper na... good start..
பதிலளிநீக்குdai appdiyae en lyf la nadantha maathiri ae iruku first paragraph....... Good start .....
பதிலளிநீக்குMachi Nee kadalai podalaya da......night 2o clock varaikum pesiniyae da....
பதிலளிநீக்கு